மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக நேற்றையதினம் (30.01.2020) அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பமான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகாமையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காந்தியின் ஞாபகார்த்தமாக பத்திரிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.