Posted by plotenewseditor on 16 January 2020
Posted in செய்திகள்
புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய விசேட நிதி ஒதுக்கீடான சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட ஏழாலை மத்தி புவனேஸ்வரி அம்மன் வீதியினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு ஏழாலை கிராம அபிவிருத்தி ஒன்றிய தலைவர் சி.கிருஸ்ணானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஏழாலை சாடியடியில் ஆரம்பித்து ஏழுகோவில் வரை செல்கின்ற குறித்த வீதி கொங்கிறீட் வீதியாக இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் கருணாகரன் தர்ஷன், ஆகியோர் கலந்துகொண்டனர். Read more