கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30ம் திகதி இரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
மட்டக்களப்பு வெல்லாவெளியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளது.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நதி முருகன் ஆலய கடற்பகுதியில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை, பகுதியில் இன்று காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.