திருகோணமலை மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.

முன்னதாக திருமலை அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபரான அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார். இந்நிலையில் புதிய அரச அதிபராக ருவான் குலதுங்க விரைவில் கடமைகளை பொறுப்பேற்பாரென கூறப்படுகிறது.