Header image alt text

யாழ். புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (07.02.2020) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது விசேட நிதியொதுக்கீட்டில் (ரூபா 500,000/-) உருவாக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். Read more

யாழ். தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி நிகழ்வில்

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (07.02.2020) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். Read more

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. Read more

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த மீண்டும் இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி வழிமொழிந்தார். பாராளுமன்றக் கூட்டத்ததொடர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னரும் இவர் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தார். Read more

அரச சேவைகளில், பயிற்சியாளர்களாகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அங்கிகாரமளிக்கப்பட்டு உள்ளதெனத் தெரிவித்த அவர், Read more

முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று நோட்டிஸ் விடுத்துள்ளது. Read more

இரத்தினபுரி பிரதான பொது வைத்தியசாலைக்கு, பெருந்தொகையான முகக்கவசம் (ஆயளம) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் சேவையாளர்களின் நலன் கருதியே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், பெருந்தொகையான முக பாதுகாப்பு கவசம், நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. Read more

சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.

அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை இன்று காலை அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமியைப் பற்றி டாக்டர் லீ வென் லியாங் இதற்கு முன்னர் எச்சரித்தார். ஆனால், அவ்வாறு செய்ததற்காக உள்ளூர்க் பொலிஸார் அவருக்குக் கண்டனம் விடுத்திருந்தனர். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கானுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டதொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு, வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் வேறுவேறு பிரதேசத்தில் இருவர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்துள்ளதுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு ஓட்டுமாவடியில் உள்ள பழைய இரும்பு கடையை விசேட அதிரப்படையின் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டபோது Read more