Header image alt text

மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக நேற்றையதினம் (30.01.2020) அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பமான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகாமையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

யாழ்ப்பாணம் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வானது நேற்று (30.01.2020) வியாழக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

யாழ்ப்பாணம் சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல திறனாய்வு நிகழ்வு நேற்று (30.01.2020) வியாழக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

சீனாவில் ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று, சீனப் பெருநிலத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கும் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடைப்பட்ட காலம் – 1 முதல் 14 நாள்கள். இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 13பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 226 பேர் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் காணப்படுகின்து. Read more

உலகின் பெரும்பாலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில், உலகச் சுகாதார ஸ்தாபனத்தால், உலகளாவிய அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமை மாத்திரமன்றி, வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் வேகத்தை அவதானித்தே, இந்த அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று, குறித்த ஸ்தாபனத்தின் தலைவர் ட்ரெடஸ் அடோனிம் கேப்ரியேசஸ் அறிவித்துள்ளார். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்துக்கான ஒத்திகைகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் 15, பெப்ரவரி 3ஆம் திகதி திங்கட்கிழமையன்று மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி, யசோதரா வித்தியாலயம், மியூசியஸ் கல்லூரி, சென். பிரிஜட்ஸ் கல்லூரி, Lady’s College, Colombo International School, Wycherley International School ஆகியனவே இவ்வாறு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன. Read more

இலங்கைக்குள் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் புதிய வகை மென்பொருள் சாதனத்தை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளாளர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். Read more

ஐரோப்பிய நாடுகளுள் மிகவும் சிறிய நாடான, லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் என்சல் போர்ன் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நால்வர் அடங்கிய குழுவினருடன் வருகைத் தந்துள்ள இவர், புதுடில்லியிலிருந்து நேற்று இரவு 10.15 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 196 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். Read more