 யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லூரி மாணவனும் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் தர்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவர், வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்து வந்து, மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அவதானித்த ஆசிரியர்கள் சிலர், மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றபோது , ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 3 ஆசிரியர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்த நிலையில், வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
மேற்படி சம்பவத்தையடுத்து, கல்வூரி வளாகத்தில், இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.