செம்பிய நாட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இன்று இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொள்கிறார்.

அவர் தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். மற்றும் செம்பிய இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.