 மாலைத்தீவுக்கான புதிய இலங்கை தூதுவராக மூத்த பாடகர் ரோஹன பத்தகேவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைக்குஉயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாலைத்தீவுக்கான புதிய இலங்கை தூதுவராக மூத்த பாடகர் ரோஹன பத்தகேவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைக்குஉயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (28) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் ரோஹன பத்தகே அழைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜோன் அமரதுங்க தர்மலிங்கம் சித்தார்த்தன், எரான் விக்ரமரத்ன மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.