 இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.நேற்றைய தினம் 468 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.நேற்றைய தினம் 468 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16,191 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 05 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு 13 -ஐ சேர்ந்த இருவரும், கொழும்பு 14, சிலாபம் இரத்மலானை பகுதிகளை சேர்ந்தவர்களுமே உயிரிழந்துள்ளனர்.