 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.நேற்று (16) 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.நேற்று (16) 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பேலியகொடை மற்றும் திவுலப்பிட்டிய கொத்தணிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் 14,170 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளானோரில் 5,807 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,806 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.