கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், திருவையாறு, தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் கொழும்பிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஆனால், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர் வெளித் தொடர்பு இல்லாதவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.