13 மாவட்டங்களில் நேற்று (08) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென, கொவிட்-19 வைரஸை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கமைய, நேற்று (08) கொழும்பு மாவட்டத்தில் 213 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more
கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் இரவு வீசிய காற்றினால் குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்ததில் குறித்த குடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் 13,929 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததில்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இலங்கையர் 90 பேர், வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில், மேல்மாகாணத்துக்கு மூடப்பட்ட நுழைவு, வெளியேறும் இடங்கள் நாளை(09)முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.