மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 12.00 மணியளவில் மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற புன்னைச்சோலையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் மரியதாஸ் (48 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மீன்பிடிக்கச் சென்றபோது வாவியில் முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டு சின்ன உப்போடையில் உள்ள களப்பு ஒன்றுக்குள் வைத்திருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலத்தினை முதலை கடுமையாக சிதைத்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலகமாக மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.