நாடாளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, ரஞ்சன் ராமநாயக்கவின் பதவி பறி போகும் பட்சத்தில், அந்த இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலான ஆவணம் சபாநாயகருக்கு கிடைத்ததன் பின்னர், இந்த வெற்றிடம் பூர்த்தி செய்யப்படும் என அறிய முடிகின்றது.