இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதை தடுப்பதற்காக ஆலோசனைகளை முன்வைக்க மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவில் கடற்தொழில் அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட மீனவர் சங்க உறுப்பினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.