இலங்கையில் மோசமடைந்து வருகின்ற மனித உரிமை நிலைமையைக் கண்காணிக்கவும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் புதிதாக ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. Read more
நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 56 ஆயிரத்து 277 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 406 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 62,445 ஆக அதிகரித்துள்ளது.