சாதாரண பொதுமக்களுக்கு  அடுத்த இரண்டு வாரங்களில், கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டினால் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகள் இவ்வாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர், முதற்கட்டமாக  நாட்டிலுள்ள 9 இலட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார ஸ்தானம் ஒரு தொகை தடுப்பூசிகளை, மார்ச் மாதத்தின் முதற் பகுதியில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.