மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று (17) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 27,018 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 17,622 பேருக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 11,710 பேருக்கும் இவ்வாறு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.