அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று நாளை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள்களைச் சந்திக்கும் நிகழ்வும் நாளை மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.