 தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. Read more
தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. Read more
 
		     பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார். இதற்காக தம்மால் முடிந்த சுயபரிசோதனைகளை செய்துகொண்டு, ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்றால், கொரோனா தொற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.
கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார். இதற்காக தம்மால் முடிந்த சுயபரிசோதனைகளை செய்துகொண்டு, ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்றால், கொரோனா தொற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.  யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் காயமடைந்துள்ளனர். கைதடி – மானிப்பாய் வீதி ஊடாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் பலாலிவீதி வழியாக இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்கு உள்ளானது. காயமடைந்த இராணுவத்தினர் 15பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் காயமடைந்துள்ளனர். கைதடி – மானிப்பாய் வீதி ஊடாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் பலாலிவீதி வழியாக இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்கு உள்ளானது. காயமடைந்த இராணுவத்தினர் 15பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று 10 ஆர்.பி.ஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விசேட அதிரடிப் படையினரை அழைத்து சென்று குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் தகர்த்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று 10 ஆர்.பி.ஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விசேட அதிரடிப் படையினரை அழைத்து சென்று குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் தகர்த்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.