யாழ். வடலியடைப்பைச் சேர்ந்த நடராஜா கிருஷ்ணாம்பிகை அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்திய குழு உறுப்பினர் தோழர் கணேந்திரன் மற்றும் தோழர் வாணி ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார். Read more
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.
நாட்டில் மேலும் ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 64 பேரின் விளக்கமறியல், எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையிலான குழுவினரை இன்று (16) சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் பெயர்பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.