உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் திகதி நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. Read more
நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
துறைமுக அதிகார சபையின் தலைவராக கெப்டன் நிஹால் கெப்பெட்டிபொல நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நியமனக் கடிதத்தை நிஹால் கெப்பெட்டிபொலவிற்கு வழங்கி வைத்துள்ளார்.
அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்ததும் பாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து விஷேட நிபுணர் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.