Header image alt text

07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவுநாள்  இன்று…..

இறுதிப் போரில், முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளர் அ. ஈழம் சேகுவேராவின் தாயாருமான தேவகி அம்மா, புற்றுநோயால, இன்று (07) உயிரிழந்துள்ளார். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று(07) சந்தித்து பேசியுள்ளார். Read more

நாட்டில் உள்ள முக்கிய வணிக வங்கிகள் சில இன்று (07) முதல் ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில் அவசர அவசரமாக தரையிறங்கியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மூவர் காணாமல்போயுள்ளதோடு, இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸினால் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) 2021 மே 18 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவின் ஊடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 1,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். Read more