அன்பார்ந்த புலம்பெயர் தேசத்து கழகத் தோழர்கள் மற்றும் உறவுகளுக்கு,
வணக்கம் ,
இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் முடக்கநிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் கஷ்டங்களுக்கு உள்ளாகி பட்டினியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. Read more
வவுனியா நகரசபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் பொலிசாரால் இன்று மதியம் (15) கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள நீதியமைச்சு முன்வைத்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதியன்று பயணக்கட்டுப்பாட்டை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் சனி (19) அல்லது ஞாயிறுக்கிழமை (20) தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டில் மேலும் 1,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (14) முற்பகல் அவர் சத்தியபிரமாணம் செய்தார்.
இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.