மட்டக்களப்பு பழுகாமம் வன்னிநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் எல்லாளன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கந்தசாமி சிவநேசம் அவர்கள் இன்று (08.12.2021) புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் காலமானார். Read more
உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலையத்திற்கு இவ்வாண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் 80 சென்ரிமீற்றர் நவீன தொலைக்காட்சி,இறுவட்டு இயக்கி மற்றும் நீர் தாங்கி ஆகியன செல்லப்பா சனசமூக நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 13 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை நீதவான் H.M.M.பசீல் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்று (08) முதல் வீதிகளில் வெற்றிலையை துப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை னாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (08) முற்பகல் சந்தித்தார்.