நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (26) மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 17 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26.12.2021) காலை இடம்பெற்றது.
26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என். வினோபிரகாஸ் தலைமையில் இன்றையதினம் மாலை நடைபெற்றது.
எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த பஸ் கட்டணங்கள் அமையுமென அவர் அறிவித்துள்ளார்.
ரயில்வே நிலைய அதிபர் சங்கம், இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்க தீர்மானித்திருந்தது. அந்த தீர்மானத்தை நாளை (27) காலை 10 மணிவரைக்கும் ஒத்திவைத்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.