எதிர்வரும் திங்கட் கிழமை (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது குறித்து புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது Read more
		    
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் சிறந்தது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்துள்ளார். 
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
துறைமுக நகரமான Mariupol உட்பட இரண்டு முற்றுகையிடப்பட்ட நகரங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை போர் நிறுத்தத்தை அறிவித்தது. மார்ச் 5, மாஸ்கோ நேரப்படி காலை 10 மணி முதல், ரஷ்ய தரப்பு அமைதி ஆட்சியை அறிவித்து. 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் (Julie J. Chung) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (04) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜுலி ஜே.சங்க் பிரதமரை சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 
தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களை மொஸ்கோவுக்கு பயணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பெலாரஸில் சுமார் 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற நிலையில், அங்குள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பை  பேணி வருகின்றது.