Posted by plotenewseditor on 4 March 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 4 March 2022
Posted in செய்திகள்
மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை ஏற்கெனவே, வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 March 2022
Posted in செய்திகள்
ரஷ்யா மீது இன்னும் பல தடைகளை விதித்து, “நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம்” என உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்ப்போருக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரோசியா 24 எனும் செய்தி சேனலில் ஒளிபரப்பான அரசு கூட்டத்தில் புடின் பேசினார். Read more
Posted by plotenewseditor on 4 March 2022
Posted in செய்திகள்
அமைச்சரவை அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 4 March 2022
Posted in செய்திகள்
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், கொழும்பில் தற்போது ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அதில் கருத்துரைத்து கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, “ இதற்குப் பின்னர், ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை: என்றார்.