ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கிராம மட்ட மகளிர் அமைப்பின் அங்குரார்ப்பன கூட்டம் பிலக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றது. நிர்வாகத்தெரிவின் பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் பவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்டச்செயலாளர் யூட், கலைஞர் தவராசா , முன்னாள் தவிசாளர் கனக தவராசா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
		    
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணமான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (16) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. 
இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் சற்று முன்னர் கைச்சாத்திட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(16) காலை மேலதிக வகுப்பிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற இரு நண்பிகளும் இரவு வரை வீடு திரும்பாதமையால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.