Header image alt text

எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. Read more

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். Read more

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். Read more

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஆறாமாண்டு நினைவு நாள் இன்று….

யாழ். சுழிபுரம் நாவலர் சனசமூக நிலையத்தின் வருடப் பிறப்பு விழா நேற்று (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சுழிபுரம் நாவலர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. Read more

இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. Read more