அம்பாறை காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் நாள் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. Read more
கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்தவரும் எமது கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் தோழர் சிவராசா அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கார்த்திகேசு வள்ளியம்மை (சிரோண்மணி) அவர்கள் நேற்று காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கொள்கையளவில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.