பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
“பொரிஸ் ஜோன்சனுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினேன். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் இலங்கை ஏற்றுமதி நாடாக மாறுவதற்கு உதவுவது போன்ற விடயங்களில் எங்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்“ என்று பிரதமர் சற்று முன்னர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று (30) பிற்பகல் விசேட தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்..
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ரணில், பிரித்தானிய பிரதமரிடம் விளக்கினார்.
இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க இலங்கைக்கு தனது ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுியளித்துள்ளார்.