Header image alt text

09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….. Read more

மைனா கோகம மற்றும் கோட்டா கோகம போராட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற களேபரங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.

நிட்டம்புவயில் இன்று(09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளார்.

அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. Read more

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

அம்பாறை காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் நாள் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. Read more

துயர் பகிர்வோம்!^

Posted by plotenewseditor on 8 May 2022
Posted in செய்திகள் 

கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்தவரும் எமது கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் தோழர் சிவராசா அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கார்த்திகேசு வள்ளியம்மை (சிரோண்மணி) அவர்கள் நேற்று காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more