Header image alt text

இழந்தவர்களை நினைவுகூரும் போது இது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாக இருக்கவேண்டும். Read more

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

பேரறிவாளன் விடுதலை-

Posted by plotenewseditor on 18 May 2022
Posted in செய்திகள் 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142 ஆவது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.

Read more

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று (17) கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு விரைவில் மானியம் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”வுக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.  தீக்சுடர் ஏற்றி, நினைவுகூரப்பட்டது.

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார். Read more

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று 2,800 மெட்ரிக் தொன் எரிவாயு தரையிறக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Read more

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். Read more

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Read more

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்றிரவு உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம்…. Read more