தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். Read more
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யவில்லை என்றும், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். அதன்பின்னர், நாளை (14) மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரையிலும் அமுலில் இருக்கும்.
புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்கு இன்று (13) காலை சென்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது.
12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.