இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 28 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more
காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் மாற்றம், வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத் தரப்புகளையும், ஊக்குவிப்பதாக இங்கிலாந்தின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர அமண்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,