இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் விமானம் கையளிக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு அமையவே, தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
சீன கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த இலங்கை அனுமதித்ததை அடுத்து, எழும் எந்த சவால்களையும் சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.