பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு வழங்கப்பட்ட மன்னிப்பின் நிபந்தனைகளுக்கு அமைய சில விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலையான பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன், Read more
இலங்கைக்கான பயண ஆலோசனையை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு இரத்து செய்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளது மற்றும் அவசரகால சட்டம் கடந்த 18 ஆம் திகதி நீக்கப்பட்டது என நோர்வே அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, புதுடெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.