தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 95ஆவது பிறந்ததின நிகழ்வு (26.08.2022) காலை 9மணியளவில் வலிகாமம்-மேற்கு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. Read more
இலங்கைக்காக சீன தூதுவர் Qi Zhenhong இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் திட்டமிடப்பட்டிருந்த கண்டிக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலுள்ள குழந்தைகள் பசியுடன் நித்திரைக்கு செல்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.
சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தை ஆய்வு செய்து வருவதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 03 நாட்களில் அனைத்து வகையான எரிபொருட்களின் மேலதிக இருப்புக்களை விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.