பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட மூவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 28 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை உட்பட நேற்று (30) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதானையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒன்றியனத்தின் உறுப்பினர்கள் 28 பேர், இன்று (31) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.