gமுன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் நடாத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோது தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களும் பங்கேற்றிருந்தார். Read more
நான்கு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி, வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுகாதாரம் ஆகிய இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்களே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரையின் பேரில், மேற்கு கடற்படை கட்டளை பிரிவு இரண்டு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை இரத்தினபுரிக்கும் நான்கு குழுக்களை களுத்துறைக்கும் அனுப்பியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ‘எவரையும் கைவிடாதீர்கள்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் திட்டத்தின் விண்ணப்ப இறுதி திகதி அக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திகதி அக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்து.
வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையதள கருத்துக்கணிப்புக்கு அமைய ஐஸ்லாந்து உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாகவும் சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகியவை 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களிலும் உள்ளன.
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் திகதிக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதாக என பார்க்குதமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் மூலமோ அல்லது www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமோ வாக்காளர் பதிவேட்டில் ஒருவர் பெயர் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.