ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. Read more
யாழ்ப்பாணம், மீசாலை கிழக்கைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதன் (காந்தன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தின் மகளிர் அமைப்புக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடன் திட்டத்திற்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளது.
04.11.2004 அன்று தெஹிவளையில் மரணித்த தோழர் தயாளன் (வேலாயுதம் தயாளகுமார் – கட்டுவன்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் IMF பணிப்பாளர் குழுவின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோதே பிரதமர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம், கிழக்கு மீசாலையைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதன் (காந்தன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகுஞ்சுக்குளம் கிராமத்தின் மகளிர் அமைப்புக்கு, அமைப்பின் உறுப்பினர்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடன் திட்டத்திற்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளது.
03.11.1988 மாலைதீவில் மரணித்த தோழர்கள் வசந்தி (மணிவண்ணன் – வடலியடைப்பு) , ஜுலி (இளவாலை), அப்பி (பெரியகுஞ்சுக்குளம்) ஆகியோரின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று….
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இந்த மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. 2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.