 பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more
பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more
 
		     வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.  நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் ஓராமாண்டு நினைவுநாள் இன்று….
27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் ஓராமாண்டு நினைவுநாள் இன்று…. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள 03 முக்கிய வணிக வங்கிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என IFC நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள 03 முக்கிய வணிக வங்கிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என IFC நிறுவனம் தெரிவித்துள்ளது.  கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வசந்த முதலிகே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வசந்த முதலிகே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பில் தேசிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை நடத்திய நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரியும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்தது.
கொழும்பில் தேசிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை நடத்திய நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரியும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்தது.  கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெங்களூருவில் சந்தித்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள், இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தின் தலைமைச் சுருக்கத்தை வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான தேவையை ஜி20 நாடுகள் அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெங்களூருவில் சந்தித்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள், இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தின் தலைமைச் சுருக்கத்தை வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான தேவையை ஜி20 நாடுகள் அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.