முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்றுமாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.கே.சிவாஜிலிங்கம், சி.நவீந்திரவேந்தன் ஆகியோரும், க. சிவநேசன்(பவன்), வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.