ATM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற ATM கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். Read more
2023ஆம் ஆண்டில் இலங்கையர்களுக்கு 6,500 கொரிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 28 .79 வீத அதிகரிப்பு என்பதுடன், இலங்கை வரலாற்றில் கொரிய வேலைவாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்ட ஆண்டு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8 மணி முதல் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளில் இருந்து அவர்கள் விலகவுள்ளனர். எவ்வாறாயினும், சத்திரசிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு போன்ற விசேட சேவைகளில் இருந்து தாம் விலகப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M. சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்ததாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டபோது எமது கட்சியின் பொருளாளரும், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்), கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்
வவுனியா கோயில்குளத்தைச் சேர்ந்த திரு. செவ்வந்தி கந்தசாமி அவர்கள் நேற்று (06.02.2023) திங்கட்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.இவர் கோவில்குளம் கண்ணன் கோவிலின் முன்னாள் பூசகரும், எமது கட்சியின் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர் தோழர் க.பார்த்தீபன் அவர்களின் அன்புத் தந்தையாரும் ஆவார்.