08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more
பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு உள்ளானார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11இ000ஐ கடந்துள்ளது.கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திங்கள்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கியில் 8இ574 பேரும்இ சிரியாவில் 2இ662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்தனர். பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்து உரையாற்றிய போது பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனா முன்பாக ஆரம்பமான பேரணி, பொல்துவ வீதியை வந்தடைந்த போது பொலிஸார் தலையிட்டனர்.
13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று(08) மாநாடு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினரால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.இன்றைய மாநாடு ஶ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனாவில் நடைபெறவுள்ளதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.