 வீதி விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் பயணித்த உந்துருளி, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
 
		     காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இந்தியாவின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகனும் இந்திய இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்தியாவின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகனும் இந்திய இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.