யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்களைக் கொண்டு யாழ். மாநகர சபையில் இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர் Read more
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று(14) மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று(13) கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போன நபர்களுக்கு இன்று(14) நண்பகல் 12 மணி முதல் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.