உயர் பதவியில் உள்ள அமெரிக்க இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மூத்த இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்துள்ளது. கிரீஸில் இருந்து வந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் இரவு 7 மணியளவில் இலங்கை வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் நேற்றிரவு திருடர்கள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இரண்டாம் மாடி ஜன்னல் மூலம் இவர்கள் உள்ளே நுழைந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.